நிகழ்வுகள்
பிரார்த்தனைகளும் கொண்டாட்டங்களும் வாழ்வின் ஒரு அங்கம். அவை நம்மை நம் அன்புக்குரியவர்களுடன் நெருக்கமாக்குகின்றன. நமக்குக் கிடைத்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றியை வெளிப்படுத்த உதவுகின்றன. இது ஒரு மத விழாவாக இருந்தாலும் அல்லது தனிப்பட்ட மைல்கல்லாக இருந்தாலும், இந்த தருணங்கள் போற்றப்படுவதற்கும் கொண்டாடுவதற்கும் மதிப்புள்ளவை.
அனைத்து சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பிரார்த்தனைகள் பக்தர்களின் பார்வைக்காக இந்த பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன
மாதாந்திர நிகழ்வுகள்

பௌர்ணமி விளக்கு பூஜை
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மாலை, பாபாவின் சந்நிதியில் அவரின் முன்னிலையில் திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது.
மேலும் திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்க படுகிறது.
வஸ்திர தானம் செய்ய விரும்புபவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யலாம்.

பல்லக்கு சேவை
ஷீரடியில் பாபாவின் சாவடி ஊர்வலத்தை நினைவுகூறும் வகையில், இங்கு பௌர்ணமி விளக்கு பூஜை முடிந்த பிறகு, பல்லக்கு சேவை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது..
பாபாவின் மீது கொண்ட அன்பினால், பக்தர்கள் சிலர் ஆர்வமுடன் சாய் பல்லக்கை தம் தோளில் சுமக்க, சிலர் சாய் ரதத்தை இழுத்துச் செல்ல, சிலர் பூக்கள் தூவ, சிலர் தீப்பந்தம் ஏந்தியவாறும், செண்டை மேளம் முழங்க , பாபாவின் நாமத்தைக் கூறிக்கொண்டே கோவிலை மூன்று முறை வலம் வருகின்றனர்..
இந்த பல்லக்கு சேவை அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஆண்டு நிகழ்வுகள்

புத்தாண்டு
ஜனவரி 1 ஆம் தேதி
ஒவ்வொரு ஆண்டையும் ஸ்ரீ சாய்பாபாவின் ஆசீர்வாதத்துடன் தொடங்குங்கள்

வருஷாபிஷேகம்
ஜனவரி
கோவில் நிறுவப்பட்ட தினத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோரும் வருஷாபிஷேகம் கொண்டாடப்படுகிறது

தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 14
நாட்டின் வயல் வளம் பெரும் என்ற நம்பிக்கையில் சாய் பாபா காய்கனிகளால் அலங்கரிக்கப்படுகிறார்.

ஸ்ரீ ராம நவமி
ஏப்ரல்
சாயிபாபா கோவில்களில் ராமநவமி ராமரின் பிறந்தநாளை சிறப்பு பிரார்த்தனைகள், சடங்குகள் மற்றும் பக்தி நடவடிக்கைகளுடன் கொண்டாடுவது ஆகும். கோவில் அலங்கரிக்கப்பட்டு, மேலும் பக்தர்கள் பாராயணம், பாடல் மற்றும் பிரசாதம் வழங்குவதில் பங்கேற்கின்றனர். இந்த திருவிழா பக்தியை சிறப்பித்துக் காட்டுகிறது மற்றும் சாய்பாபாவின் நீதி மற்றும் ஆன்மீக போதனைகளுடன் ஒத்துப்போகிறது.


குரு பூர்ணிமா
ஜூலை
இந்த நன்னாளில் நமது ஆன்மீக குருவான ஸ்ரீ சாய்பாபாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கனகாபிஷேகம் செய்யப்பட்டு, அந்த நாணயங்கள் பக்தர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படுகின்றன, ஏனெனில் இந்த நாணயங்கள் மக்கள் வீட்டிற்கு செழிப்பைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

விஜயதசமி
அக்டோபர்
விஜயதசமி அன்று சாய்பாபா தன் உடல் வடிவத்தை விட்டு வெளியேறியதால் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை நினைவுகூறும் வகையில் சாய் பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
ஐப்பசி பௌர்ணமி
அக்டோபர்/நவம்பர்
தமிழ் மாதமான ஐப்பசியில் பௌர்ணமி நாளில் சாய்பாபாவுக்கு அன்னாபிஷேகம் செய்து வெண்ணெய் சாத்துவார்கள். பிரசாதமாக வழங்கப்படும் வெண்ணெயை உட்கொள்வதால் வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத குடும்பங்களின் பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது.