ஆரத்தி
ஆரத்தி என்பது ஒரு புனித மான சடங்கு, இது தெய்வத்தின் முன் ஏற்றப்பட்ட விளக்குகளை அர்ப்பணிப்பதோடு பக்தி பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகளுடன் அடங்கும். இந்த விழா மரியாதை மற்றும் நன்றியின் இதயப்பூர்வமான வெளிப்பாடாகும், இங்கு பக்தர்கள் சாய்பாபாவின் முன் விளக்குகளை வட்டமிட்டு, அமைதியான மற்றும் ஆன்மீக சூழலை உருவாக்குகிறார்கள்.

தினசரி ஆரத்தி நேரங்கள்
காலை 6:00 மணி
மதியம் 12:00 மணி
மாலை 6:00 மணி
இரவு 8:00 மணி
கோவில் நேரங்கள்
திங்கள் முதல் ஞாயிறு வரை
காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை
மதியம் 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை
வியாழக்கிழமைகள்
காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
அபிஷேக நேரம்
காலை 7:15 மணி
கூட்டு பிரார்த்தனைகள்
அன்னதானம்
அன்னதானம் மிக உயரிய தானமாகும். சாய் பாபாவிற்கு மிகவும் பிடித்த ஒன்று. மற்றவர்களுக்கு உணவளித்து அவர்கள் பசியாறுவதை காணும்போதே, நம் மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும்.
இவ்வாலயத்தில் வியாழக்கிழமைகளிலும், விசேஷ தினங்களிலும் ஏழை எளிய மக்களுக்கும் சாய் பக்தர்களுக்கும் முழு நேர அன்னதானமும், பௌர்ணமி விளக்கு பூஜை அன்று இரவு அன்னதானமும் செய்யப்படுகிறது.
அன்னதானத்திற்கு உதவ விரும்பும் பக்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம்.
கூட்டு பிரார்த்தனை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. நாம் மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும்போது அதன் பலன் பல மடங்காகிறது. நம் சாய் பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் ஒவ்வொரு ஆரத்தி முடிந்த பிறகும் கூட்டு பிரார்த்தனை நடை பெற்று வருகிறது..
